வெசாக் வாரத்தை முன்னிட்டு, நுவரெலியா மாவட்ட கலாசார திணைக்களமும் நுவரெலியா சர்வதேச பௌத்த மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த “சர்வமத பக்தி கீத சங்கமம்” அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நுவரெலியா சர்வதேச பௌத்த மத்திய நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நுவரெலியா நகரில் இயங்கும் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க தர்ம பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகளின் பக்தி கீதக் குழுக்கள் பங்கேற்றன. மாணவர்கள் தத்தமது மதங்களுக்குரிய பக்தி கீதங்கள், கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றி, மத நல்லிணக்கத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
நுவரெலியா சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தின் விகாராதிபதி கிரிஒருவே தீரானந்த தேரரின் வழிகாட்டலில், நுவரெலியா மாவட்ட கலாசார அதிகாரி நாமினி பண்டாராவின் மேற்பார்வையில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. தர்ம பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆர். எப். எம். சுஹைல் – நுவரெலியா



