தலவாக்கலை பாமஸ்டன் பாடசாலையின் ஆசிரியரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான எஸ்.ஆமஸ்ரோங் (வயது 43), இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து தீவிர சிகிச்சையில் உள்ளார்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவரின் உயிரைக் காக்க அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Kidney Transplant) மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கான சிகிச்சைச் செலவுகள் மிக அதிகமாக உள்ளதால், அவரின் குடும்பத்தினரால் அதைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை அவர் ஒருவரே குடும்பத்தைக் நடத்தி வருகின்ற நிலையில், அவரின் பிள்ளைகள் இருவரும் பாடசாலை செல்கின்றனர். இதனால் அவர் பாரிய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், மனித நேய உணர்வு கொண்ட அனைவரிடமும் அன்புடன் உதவி கோரப்படுகிறது. தங்களால் இயன்றளவு நிதி உதவி செய்து, ஓர் உயிரைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களுடன் தொடர்புகொள்ளலாம்:
தொடர்பு எண்கள்:
0767581933
0767605311
வங்கி விபர ங்கள்: இலங்கை வங்கி (Bank of Ceylon)
கணக்கு இலக்கம் – 2233210
கொமர்ஷல் (Commercial Bank)
கணக்கு இலக்கம் – 8027557514
ஒரு சிறிய உதவி – ஒரு பெரிய உயிர் காப்பாற்றும் என்பதை மனத்தில் கொண்டு, தயவுசெய்து உங்கள் ஆதரவை வழங்குங்கள்.
கெளசல்யா
