உயர் தரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தர (G.C.E. A/L) பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திருமதி இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
அதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09ஆம் திகதி நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
