காவத்தை எந்தானை மீனாட்சியம்மாள் வித்தியாலயத்தில் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தைப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் திறந்து வைத்தார்.
பாடசாலை அதிபர் திருமதி பி. பங்கயற்செல்வி தலைமையில் நேற்று (12) நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நிலூஷா லக்மாலி கமகே, பாடசாலைஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக எழுது பொருள்கள் வழ்கப்பட்டன.
எஸ். ஆர். இரவிந்திரன்






