மேல், சப்பிரகமுவை, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்தப் பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார், அநுராதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் (40-50) கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
