குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கையர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் இரண்டொரு நாளில் வீடு திரும்புவார்கள் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
குவைத்திலுள்ள இலங்கையர்கள் எப்போதும் அந்நாட்டு அரசு விடுக்கும் எச்சரிக்கை தகவல்களின்படி நடந்துகொள்ளுமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
