ஹங்வெல்லை – ஹோமாகமை வீதியில், ஜல்தரை பகுதியில் வீதியில் பயணித்த பெண்கள் இருவர் கார் ஒன்றினால் மோதி உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் தெமோதரை, பெத்தேவெலை, மெத்தேவத்தை கொலனியைச் சேர்ந்த ஆர்.எம். தமயந்தி (42 வயது), கிராந்துருகோட்டே, உல்ஹிட்டியைச் சேர்ந்த எம்.எம். வசந்தி (44 வயது) ஆகிய இருவராவர்.
இவர்கள் இருவரும் ஜல்தரை, ஹேன்பிட்டி பகுதியில் உள்ள விலங்குத் தீவன உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தவர்களாவர். சம்பவத்தினமான நேற்று (06) இரவு இவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பணிமுறைக்காக சென்றுகொண்டிருந்தபோது, இரவு 7:15 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின் பின்னர் படுகாயமடைந்தவர்கள் நவகமுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய ஓட்டுநரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
எஸ். ஆர். இரவீந்திரன்
