இந்தியாவின் வீட்டுத் திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சரண்யா வி.எஸ் தெரிவித;தார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசு முன்னெடுக்கும் 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தில், தற்போது 1300 வீடுகள் நிர்மாண இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாக கண்டி இந்திய உதவி உயஸ்தானிகர் சரண்யா வி.எஸ். தெரிவிக்கின்றார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் 10000 வீடமைப்பு திட்டம், வைத்திய சாலை திட்டம், பாடசாலைகள் அமைக்கும் திட்டம் போன்ற பல்வேறு அபிவிருத்தி வேலைகளுக்கு இந்தியா உதவி வருகிறது என்றும் அவர் கூறினார். கண்டியில் பிராந்திய ஊடகவியலாளர்களுடனான இன்றைய (02) சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.
குறிப்பாக 10000 ஆயிரம் வீடமைப்பு திட்டத்தில் 1300 வீடுகளுக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் உள்ளது.
2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் பல சவால்களைச் சந்திக்க நேரிட்டு தற்போது வேகமாகப் பணி இடம்பெற்ற நிலையில் உள்ளது.
இந்தியாவின் வீட்டுத் திட்டம் 2017 இல் ஆரம்பித்தாலும் பல்வேறு உலகளாவிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாகத் தாமதமானது.

குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் கொவிட் 19 , 2022 பொருளாதார நெருக்கடி, இதன் பின்னர் 2023 இல் நாடு நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது.
எஃது எப்படியோ எங்கள் இந்திய அரசு மேற்கொண்டு வரும் 10000 வீட்டுத் திட்டம், ஏனைய அனைத்து திட்டங்களையும் எமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு மேற்கொண்டு வரும்.
10000 வீட்டுத் திட்டத்தில் 1300 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.மேலும் 2025 ஆம் ஆண்டு 4000 வீடுகள் அமைப்பதற்கான திட்டம் ஜனாதிபதியால் முன் வைக்கப்பட்டது.
அதன் படி தற்போது அதற்கான வேலைத்திட்டங்கள் மும்முரமாக நடந்து வருகின்றன.இந்த வேலை திட்டத்தில் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட உள்ளோம் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் நுவரெலியா,கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 20 நிருபர்கள் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்

மகன் இறந்தது தெரிந்தும் அவன் வருவான் என கிரிக்கட் மட்டையுடன் புலம்பும் தாய
