முன்னாள் ஐஜிபி விக்ரமரத்தின துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்தின துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தாமே துப்பாக்கிச் சூட்டை நடத்தி தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க: மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா
அத்துருகிரிய பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையில் சேவையாற்றிய சி.டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35ஆவது காவல்துறை மா அதிபராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ். ஆர். இரவீந்திரன்
