பாக்கியம் கல்லூரி பிரதி அதிபருக்கு பிரியாவிடை வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியின் பிரதி அதிபர் வீ. ஜெயக்குமார் தனது 36 வருடக்கல்விப்பணியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றார்.
அவரது நீண்ட கால அர்ப்பணிப்பான சேவைக்காக பாடசாலை நிர்வாகம், பாடசாலை சமூகம். ஆசிரியர்கள், மாணவர்கள்,பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், நலன் விரும்பிகள் என சகலரும் இணைந்து பிரியாவிடை நிகழ்வை சிறப்பாக நடத்தினர்.
கணித ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் பிரதி அதிபராகவும் அதிபராகவும் கண்டி,மாத்தளை மாவட்டப் பாடசாலைகளில் பணியாற்றியதோடு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் பெரிதும் பங்களிப்புச்செய்து அயராது உழைத்தவர்.



பன்விலை நிருபர் ம. நவநீதன்
மேலும் வாசிக்க: சபரகமுவை கல்வித் திணைக்களத்தில் தனி தமிழ்ப்பிரிவு
