உடபுசல்லாவை சிவகாந்தனுக்கு இலங்கை கரப்பந்தாட்ட அணியில் வாய்ப்பு அளித்து மலையக மண் பெருமைபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கரப்பந்தாட்ட தேசிய அணியில் உடப்புஸ்ஸல்லாவை கம்பஹா கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தன் இணைந்து கொண்டு மலையக மண்ணுக்குப் பெருமிதம் சேர்த்துள்ளார்.
கம்பஹா தமிழ் மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்திலிருந்து சாதாரண தரம், உயர்தர வகுப்பு வரை கல்வி கற்று, சுமார் 15 வருட காலம் கரப்பந்தாட்ட விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார்.
இவர் 2021 ஆம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படை கரப்பந்தாட்ட அணியுடன் இணைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறார்.
மலையகத்தில் கடந்த 110 வருடத்தில் இலங்கை தேசிய அணியில் பங்கு பெற்றிருக்கும் நான்காவது வீரனாக இவர் இடம் பெறுகிறார்.
புதியவர்களை இலங்கை கரப்பந்தாட்ட அணி தெரிவு செய்யும் போட்டியில் 120 போட்டியாளர்கள் பங்குபற்றினர். அதிலிருந்து மிகச்சிறந்த 30 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பயிற்சியின் பின் சிறந்த 14 விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய இலங்கையின் கரப்பந்தாட்ட அணிக்கு சிவகாந்தனும் தேர்வாகியுள்ளார்.

CAVA men’s volleyball Championship போட்டிகளுக்காக அடுத்த மாதத்தில் பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று சிவகாந்தன் கரப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இலங்கை அணியில் உடபுசல்லாவை சிவகாந்தனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டமை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்:
“வளர்ந்து வரும் அனைத்து விளையாட்டு வீரர்களும் ஓரிடத்திலேயே நின்று விடாது மென்மேலும் உச்சத்தை அடைய வேண்டும். என்னைப் போல் இன்னும் பல வீரர்கள் தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை” என்கிறார் சிவகாந்தன்.
“எனது தந்தை சந்திரபோஸ் தாய் ஜெயமணி ஆகியோருக்கு நன்றி பாராட்டுவதோடு, பாடசாலை மட்டத்திலிருந்து விளையாட ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் என்னை எனது விளையாட்டுக் கழகமான கம்பா சக்தி விளையாட்டு கழகத்திலிருந்து ஊக்குவித்த எனது முதல் கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களான அன்பழகன், சண்முகச்செல்வம்,
இவர்களோடு இணைந்து மேலும் என்னை இந்நிலைக்குக் கொண்டு சென்ற எனது சகோதரர் விவேகானந்தன் என்கின்ற [விவேக்] இவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அது மட்டுமல்லாது என்னை வெளிப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று SVP [Sports Club]எனும் கழகத்துடன் இணைத்து, அக்கழகத்தில் சிறந்த விளையாட்டு வீரனாக உருவாக்கித் தந்தமைக்கும் SVP கழகத்தின் உரிமையாளரான அருண்குமார் அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றி கூறக் கடமைப்படுகிறேன்” என்று மேலும் சொன்னார் சிவகாந்தன்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கிரிக்கட்
