மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் வைபவம் கண்டி, பன்விலை, மடுல்கலை, அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ். ஸ்ரீதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வத்தேகமை கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி டபிள்யூ. எம். ரி. என். குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவத் தலைவர்களுக்கு சின்னங்களைச் சூட்டி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மாணவ தலைவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



பன்விலை நிருபர் ம. நவநீதன்
இதையும் படிக்கலாம்: பன்விலை நெல்லிமலை சிவனேஸ்வரா சிறுசர் சந்தை
