சபரகமுவை கல்வித் திணைக்களத்தில் தனியான தமிழ்ப் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறினார்.
இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழி மூலப் பாடசாலை அதிபர்களுக்கிடையான கலந்துரையாடல் ஒன்று சபரகமுவை மாகாண கல்வி அமைச்சு,மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இரத்தினபுரி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர்:
மலையக பாடசாலை மாணவர்களின் கல்வியில் பல்வேறு தாக்கங்கள் காணப்படுகிறது. குறிப்பாக சபரகமுவ மாகாணத்தில் உள்ள மலையக பாடசாலை மாணவர்களின் கல்வியில் பல்வேறு தாக்கங்கள் காணப்படுகிறது .
மாணவர்களின் தாக்கத்தைக் குறைக்க சபரகமுவை கல்வித் திணைக்களத்தில் தனித் தமிழ்ப் பிரிவு மிக அவசியம்!
நேரடி தாக்கத்தை விட மறைமுகமான தாக்கங்கள் அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது.
இதனால் இவர்களின் கல்வியில் உள்ள தாக்கங்கள் அல்லது அழுத்தங்களை களையும் பொருட்டு சபரகமுவை கல்வித் திணைக்களத்தில் தனியான தமிழ் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்படும்.
இவ்வாறு பிரிவு ஒன்று ஆரம்பிக்கும் பட்சத்தில் மாணவர்களின் கல்வியில் அபிவிருத்தியை காண முடியும். யாரையும் குறைக்கூறிக்கொண்டு இருக்க முடியாது அப்படி இருந்தால் நமக்கு குறைகள் மட்டுமே எமக்கு மிகுதியாக இருக்கும்
இவ்வாறு தமிழ் மொழி பிரிவு ஒன்று ஆரம்பிக்கும் பட்சத்தில் மலையக பாடசாலைகளை நேரடியாக தேசிய செயற்றிட்டங்களுக்குள் உள்வாங்க முடியும்.
இதனையே நமது சனாதிபதி அநுர குமார திசாநாயக்காவும் கூறி வருகின்றார்.
இனம், மதம், மொழி குல வேதங்களுக்கு அப்பால் இருந்து எமது அரசாங்கம் செயற்படுகின்றது.
இதனையே சபரகமுவ மாகாணத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும் வாசிக்க: இரத்தினபுரி வலய மட்டத்திலான தமிழ் மொழிப் போட்டியும் விழாவும்
அதன் காரணமாக இம்மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு பலபௌதீக வளங்கள் பெற்றுக்கொடுக்கப் பட்டுள்ளது. என்பதனை தாங்கள் அறிந்ததே.


இதனை தவிர சபரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற பல ஆசிரியர்கள் தற்காலிக இடமாற்றம் பெற்று வெளி மாகாண பாடசாலைகளில். கடமை புரிகின்றனர். இவ்வாறு இடமாற்றம் பெற்றுள்ளவர்களின் இடமாற்றத்தை இரத்து செய்யப்படும்.
சபரகமுவ மாகாண தோட்ட பாடசாலைகளுக்கு காவலாளிகள், பாடசாலை காரியாலய உதவியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கருதி இந்திய அரசாங்கம் பாரிய நிதி உதவி செய்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக 75 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளில் பதில் கடமை புரியும் அதிபர்கள் பாதிக்கப்படாத வகையில் அதிபர் நியமனங்கள் எதிர்காலத்தில் வழங்கப்படும்.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ருவன்புர கல்வியில் கல்லூரியில் ஆரம்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி நெறி ஆரம்பிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலை கமில் உள்ள காணி பிரச்சினை தீர்க்கப்படும். இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இம்மாவட்டத்தில் உள்ள 40 தோட்ட பாடசாலைகளுக்கு செல்லும் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும்.
இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட தமிழ் மொழி மூல பாடசாலை ஒன்று அமைக்கப்படும்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சனாதிபதி அநுர குமார திசாநாயக்காவுக்கும் அரசாங்கத்திற்கும் 75 சதவீதமானவர்கள் தமதுஆதரவை வெளியிட்டுள்ளனர்.
மலையகத்தை பொருத்த வரை இது 94.5 சதவீதமாகவுள்ளது என்றார்
இரத்தினபுரி எஸ். ஆர். இரவீந்திரன்
