அரச நெற்களஞ்சியங்களிலொன்று
அவசரமாக நெல்லைக் குற்றி அரசியாக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவுச் சுமையை குறைக்கும் நோக்கில், அரசின் நெல் களஞ்சியங்களில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் கையிருப்புகளை அவசரமாக அரிசியாக மாற்றி, ‘தேசிய சதொச’ என்ற புதிய பெயரின் கீழ் சந்தைக்கு வெளியிட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அவசரமாக நெல்லைக் குற்றி அரசியாக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும் இந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அஸ்வெசும் (Aswesuma) நலன்புரி பயனாளிகள். அரச ஊழியர்களுக்குக் குறைந்த விலையில் தவணை முறையில் அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அரச ஊழியர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோகிராம் அரிசி தவணை முறையில் வழங்கப்படும். இதனால், ஒரே தடவையில் முழுத் தொகையையும் செலுத்த வேண்டிய அவசியமின்றி, தவணைகளாக பணம் செலுத்தும் வசதி அவர்களுக்கு கிடைக்கும்.
மேலும், அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தவணைச் சலுகையை, அஸ்வெசும் நலன்புரி பயனாளிகளுக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அதேவேளை, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் விலையை விடவும், அஸ்வெசும் பயனாளிகளுக்கு மேலும் குறைந்த,சலுகை விலையில் இந்த அரிசி வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எஸ். ஆர்.இரவீந்திரன்

