தாய்லாந்தில் 11வயது சிறுவன் செலுத்திய வாகனம் மோதி 9 பேர் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான முக்தஹானில், 11 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் பிக்-அப் வாகனத்தைசெலுத்திச் சென்று பௌத்த துறவிகளின் ஊர்வலத்தின் மீது மோதியதில்,ஒன்பது துறவிகள் உயிரிழந்ததுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
துறவிகள் 30 பேர் அடங்கிய குழு அவர்களது ஆன்மீகத்தைப் பின்பற்றுபவர்கள் அடங்கிய குழுவினர், முக்தஹானில் இருந்து உபோன் ரட்சதானி மாகாணத்தை நோக்கி 260 கி.மீ தூரப் புனித யாத்திரை நடைப்பயணத்தைத் ஆரம்பித்திருந்தனர்
11வயது சிறுவன் செலுத்திய வாகனம் தேரர்கள் வீதியோரமாக ஒற்றை வரிசையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே, அவர்கள் மீது மோதியுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த துறவி ஃபிரா சோம்போங், ஒரு சிறுவன் பிக்கப் வண்டியை ஓட்டி வருவதைப் பார்த்ததாகவும், தான் தியான மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்த அந்த நொடியில், எதிர்பாராத விதமாக அந்த வாகனம் மோதியதாகத் தெரிவித்துள்ளார்.
வாகனம் வந்த வேகத்தில் தங்கள் மீது மோதியதாகவும், அதிர்ஷ்டவசமாக தானும் மற்றொரு துறவியும் உயிர் தப்பியதாகவும் ஆனால் தங்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறினார்.
அப்போது சம்பவ இடத்திலேயே துறவிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 20 இற்கும் மேற்பட்டோர் அவர்கள் முக்தஹான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் சிகிச்சை பலனின்றி 3 துறவிகள் உயிரிழந்துள்ளதுடன் எஞ்சியோர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

