யாசகர்கள் சிலருக்கிடையிலான வாய்த்தர்க்கம் முற்றியதால் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் நாத்தாண்டியாவில் நேற்றுக் காலை (06) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காக்காப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பிச்சைக்காரர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் அங்குள்ள மேலும் இரண்டு பிச்சைக்காரர் களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே, சந்தேகநபர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.
எஸ். ஆர். இரவீந்திரன்
