பிரஜா சக்தி என்ற பெயரில் என்பிபி பினாமிகளால் அரச சேவை சீர்குலைக்கப்படுவதாக மலையகத் தியாகிகள் ஒன்றியம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் தம் கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியாமல் அவதியுறுவதாக மலையகத் தியாகிகள் ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் – தியாகி எஸ். சத்தியேந்திரா ஜனாதிபதிக்கும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் முறையிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 03 ஆம் திகதியிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குத் தனியான நிரந்தரப் பிரதேச செயலாளர் ஒருவரை நியமித்து அரச சேவையை முறைப்படுத்துமாறும் தியாகி சத்தியேந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரஜா சக்தி அமைப்புக்கு வாக்கெடுப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து கிராமங்களில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் மலையத் தியாகிகள் ஒன்றியம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
கௌசல்யா
