பூண்டுலோயா வெளிக்கட்டி பகுதியில் கொள்கலன் நிலைகுலைந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு!
தவலந்தன்னை – பூண்டுலோயா பிரதான வீதியின் வெளிக்கட்டி பகுதியில் கொள்கலன் வாகனம் ஒன்று இன்று (12) மாலை நிலைகுலைந்து விபத்துக்கள்ளானது.இந்த விபத்தினால் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.
சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வருகை தந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். வீதியை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பாதை சீராகும் வரை வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
– கௌசல்யா



