நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கு திரும்பும் காமினி தேசிய பாடசாலை சந்தி அருகில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவரும் பெண் ஒருவரும் அடங்கலாக மூவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை பிரதான வீதியிலிருந்து நுவரெலியா பிரதான நகர் நோக்கிப் பயணித்த வானொன்றும் நுவரெலியா நகரில் இருந்து நானுஓயா நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்,
