filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 34;
இனிவரும் காலங்களில் அரசாங்கக் கொள்கைக்கமைய ஓர் இனத்திற்காக ஒரு மொழி பாடசாலைகள் அமைப்படமாட்டா. பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் அனைத்தின மாணவர்களும் ஒன்றாகக் கல்வி கற்கும் வகையில் மும்மொழி பாடசாலை மட்டுமே அமைக்கப்படும் என்று ஆளுங்கட்சி எம்பீ ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது தேசிய கட்டட அகழ்வாராய்ச்சி திணைக்களத்தினால் மண் சரிவு அபாயம் எனக் குறிப்பிடப்பட்ட பாடசாலைகள் மட்டும் வேறிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுமே தவிர, புதிதாக ஒருமொழி அதாவது தனிமொழி; தனியின பாடசாலைகள் அமைக்கப்படமாட்டா. இதில் அரசாங்கம் திடமான தீர்மானத்திலுள்ளது. இனரீதியான பாடசாலைகளால் நாட்டு மக்களிடையே ஒற்றுமை குறைந்து காணப்படுகின்றது என்று இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி மறுசீரமைப்பு குறித்த பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான சுனில் ராஜபக்ஷ கூறினார்.
இரத்தினபுரி காவத்தை வெள்ளாந்துறையில் அமைந்துள்ள உருவன்புரம் கல்வியியல் கல்லூரியில் தொழினுட்பப் பாடநெறி தமிழ்மொழியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுனில் ராஜபக்ஸ கூறினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம பதவியேற்ற பின்னர் இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ள பணிகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று 03 ஆம் திகதி மாலை இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு திரு. சுனில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார சுபசிங்கா தலைமையில் நடைபெற்ற அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி,பாராளுமன்ற உறுப்பினர்கள், இரத்தினபுரி மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அந்தச் சந்திப்பின்போது தொடர்ந்த உரையாற்றிய சுனில் ராஜபக்ஷ:
இரத்தினபுரி மாவட்டத்தில் தொழினுட்பப் பாடநெறி ஆரம்பிக்ப்படுவது கட்டாயமாகும். இம்மவாட்டத்தில் இப்பாடநெறி கற்பிக்க பாடசாலைகளில் வளவாளர்கள் இல்லை. இம்மவாவட்டதில் உள்ள தமிழ்மொழி மூல மாணவர்களில் 10 சத வீத மாணவர்கள் இத்துறையில் கல்வி கற்க ஆர்வமாகவுள்ளனர். எனவே, கல்விக்குழுவின் ஆலோசனைபெற்று உருவன்புரம் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் தொழினுட்பப் பாடநெறி தமிழ்மொழியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்வி மறுசீரமைப்பிற்கமைய பாடசாலைகளில் குறிப்பாக ஆரம்பக் கல்வி பாடசாலைகளில் கற்பிக்கும் போது, தொழினுட்ப உபகரணங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்று கல்வி கற்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, கட்டாயமாக வகுப்பறையில் திறன் பலகை (Smart Board) பாவிக்க வேண்டுமென்று கல்வி அமைச்சோ அமைச்சர்களோ கூறவில்லை. அத்துடன் ஒவ்வொரு வகுப்புக்கும் திறன் பலகை வேண்டுமென்று பலரும் எதிர்ப்பார்க்கின்றனர். இது நடைமுறையில் சாத்தியமற்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு சில பாடசாலைகளில் பெற்றோர்களை வற்புறுத்தி திறன் பலகை வாங்குவதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்
