குடும்பத் தகராற்றில் மனைவி தாக்கிக் கணவர் உயிரிழந்த சம்பவமொன்று ஹொரணை, அரம்பகந்தை பகுதியிலுள்ள வீட்டொன்றில் இடம்பெற்றுள்ளது.
இன்று (07)இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்தை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, சம்பவத்தன்று தம்பதியினருக்கிடையில் வீட்டில் ஏற்பட்ட வாய்த்தகராறு தீவிரமடைந்ததையடுத்து, ஆத்திரமடைந்த மனைவி கூரிய ஆயுதமொன்றைப் பயன்படுத்தி கணவரைத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
எஸ். ஆர். இரவீந்திரன்
