உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் உள்ள கேன்சஸ் சிட்டியில் சனிக்கிழமையன்று (ஜூன் 6) நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
இங்கிலாந்துக் காற்பந்துக் குழு தனது உலகக் கிண்ணப் போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த ‘ஸ்வோப் சாக்கர் வில்லேஜ்’ பயிற்சி முகாமிலிருந்து ஏறத்தாழ 6.4 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது.
