குத்துச்சண்டை போட்டியில் நுவரெலியா- பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றுமொரு சாதனை படைத்தள்ளனர்.
மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த குத்துச்சண்டைப் போட்டியில், நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாணவர் யுவேந்திரன் (சீனியர் வயதுப் பிரிவு) 60–65 கிலோ எடைப்பிரிவில் இறுதிச்சுற்று வரை விளையாடி, வெள்ளிப்பத்தைச் சுவீகரித்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவர் அரையிறுதியில் கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி வீரரை எதிர்கொண்டு வெற்றி பெற்று; இறுதிச்சுற்றில் கண்டி தர்மராஜா கல்லூரியுடன் போட்டியிட்டார்.
அதேபோல், இக்கல்லூரி மாணவி செல்வி சபீர்த்தனா (ஜூனியர் வயதுப் பிரிவு) 46–48 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியில் கண்டி மகமாயா கல்லூரி மாணவியை எதிர்கொண்டு வெற்றி பெற்றதோடு இறுதிசுற்றில் கண்டி தீரானந்தா கல்லூரிக்கு எதிரான போட்டியில் பங்குபற்றி வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்தார்.இப்போட்டி 2026 ஜூன் 4 முதல் 7 வரை கண்டி புனித சில்வஸ்டர் கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விரு மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து அவர்களின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்த குத்துச்சண்டை பயிற்சியாளரும் ஆசிரியருமான அருளழகனுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இம்மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வழிகாட்டுதலும் மேலதிக ஆலோசனைகளும் வழங்கிய நுவரெலியா கல்வி வலயத்தின் விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் சுசந்த வீரசேனா அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இப்போட்டிக்கு மாணவிகளை அழைத்துச்செல்வதற்கும் அவர்களுக்கான பாதுகாப்பினை வழங்குவதற்கும் மேலதிகப் பயிற்சிகளை வழங்குவதற்கும் உதவி புரிந்த, நுவரெலியா நல்லிளைப்பாற்றிக் கல்லூரியின் பெண் குத்துச்சண்டை பயிற்சியாளரான செல்வி வேஜினி அவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.
malaikuruvi.com


