கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந் தலைமையில் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களுக்கிடையிலான அணிகளுக்கான கிரிக்கெட் சுற்று போட்டி இன்று (11) நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்ச்சி கொட்டகலை பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சயாக நடைபெற்றது.
அப்போது பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
பிரதேச சபையின் தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள்,சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வெற்றிக் கிண்ணங்கள் கொட்டகலை நகரில் ஊர்வலமாக வாகனங்களில் எடுத்துச் செல்ல பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்க பட்டன.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்




