ஈரான் மீண்டும் அணுஆயுதத்தை உருவாக்கவோ, வாங்கவோ முயன்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (16) எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ஈரான் – அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப், இரு நாடுகளுக்கும் இடையேயான இறுதி ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் திகதியன்று சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானிடம் அணுஆயுதம் இருக்கக் கூடாது என்பதுதான் தனது முக்கிய நோக்கம் என்றும், அதற்காகவே தான் இதில் தலையிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிட்ட ட்ரம்ப் ஈரானுடன் ஒரு நல்ல உறவு இருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
