எல்பிட்டி பிரதேசத்தில் கைதி செய்ய முற்பட்ட சந்தேக நபர் ஒருவர், பொலிஸாரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
எல்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர் குழுவினர் சோதனை நடவடிக்கை ஒன்றிற்காக கஹதுவை பிரதேசத்திற்குச் சென்றிருந்த வேளையில், அங்குச் சந்தேக நபர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.
அப்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். எனினும், காயத்துடன் அவரின் சகாக்கள் பொலிஸாரின் பிடியிலிருந்து அவரை மீட்டுச்சென்றுவிட்டனர்.
சந்தேக நபர்கள் தாக்கியதில் காயமடைந்த ஓர் உத்தியோகத்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு மீண்டும் பொலிஸார் வலை வீசியுள்ளனர்.
