பஸ் கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. புதிய கட்டணம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.
குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண சேவையின் கீழ் 100 கிலோமீற்றருக்கும் குறைவான பயணங்களுக்கு கட்டணம் 12 சதவீதத்தாலும் 100 கிலோமீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட பயணங்களுக்கு 20 சதவீதத்தாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
