இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மட்டத்திலான தமிழ் மொழித் தினப் போட்டி வெள்ளிக்கிழமை (10)பாடசாலை அதிபர் இருளப்பன் இரவி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சபரகமுவ மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ. சண்முகநாதன் பிரதம அதிதியாகவும் இரத்தினபுரி வலயக்கல்விக் உதவி கல்வி பணிப்பாளர்களான எஸ். இராஜ்குமார், பி.கவிதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
க்
வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு நடைபெற்ற கூத்து நிகழ்வின்போது மலையகத்தில் பிரசித்திபெற்ற காமன் கூத்தின் ஒருபகுதியும் இடம்பெற்றது. இஃது அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி எஸ். ஆர். இரவீந்திரன்



