கண்டி மோப்றே கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தேவாலயத்தின் அர்ப்பணிப்பு விழா ஒன்பதாம் திகதி வியாழனன்று நடைபெற்றது.
“பாடசாலை அதிபர் திருமதி மனோரஞ்சனி கிங்ஸ்லியின் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் குருணாகல் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை நிஷாந்த பெனாண்டோ ஆண்டகை கலந்து கொண்டு தேவாலயத்தை அர்ப்பணித்தார்.
கண்டி மாநகர சபை மேயர் சந்திரசிறி விஜயநாயக,கிறிஸ்தவ மிசனரி சமூக தலைவர் ஜே. சேதுராமன்,முகாமையாளர் பாக்கியராஜன் ஐயாதுரை, வர்த்தக பிரமுகர்கள், கல்விமான்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
1922 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த அருட்சகோதரர்கள் இருவரால் கிறிஸ்தவ மதப் பெறுமானங்களையும் விழுமியங்களையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பன்விலை நிருபர் ம. நவநீதன்






