வரலாற்றில் முதல் முறையாக – தமிழ் மொழிக்கு அங்கீகாரம்!
சபரகமுவை மாகாண நூலக, கலை, இலக்கிய விழாவின் பிரதம விருந்தினராக
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசில்கள், சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இது இந்த மாகாணத்தில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்ட வரலாற்று அங்கீகாரமாகும்!
வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் மொழிக்கு முழு அங்கீகாரம் வழங்கி சபரகமுவை மாகாண நூலக சேவைகள் சபையின் ஏற்பாட்டில் கலை இலக்கிய விழா நேற்றைய தினம் (04/06) சிறப்பாக நடைபெற்றது.
சபரகமுவை மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தினா, பாராளுமன்ற உறுப்பினர்கள், நூலக சபையின் தலைவர்,அரச அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.






