‘நீட்’ தேர்வு (மருத்துவ படிப்புக்கான தகுதிகாண் பரீட்சை) எழுதவிருந்த 19 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இடம்பெற்றுள்ளது.
ஒரு தடவை பரீட்சைக்குத் தோற்றிய இந்த மாணவி இம்முறை பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்தமையால், மீள் தேர்வு எழுதவிருந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஆரம்பத்திலிருந்தே ‘நீட்’ தேர்வு வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


