இன்று 20 ஆம் திகதி மதியம் 2 மணி முதல் 2.30 வரையிலான 30 நிமிடங்கள் இடி மின்னல் கடும் காற்றுடன் கூடிய கன மழை மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்ததால் வீதியில் பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்தது. இதனால், போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது.
ஹட்டன் மஸ்கெலியா பிரதான சாலையில் நோர்வூட் பொலிஸ் பிரிவில் வீதி ஓரத்தில் இருந்த பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு நோர்வூட் பொலிசார் மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் ஹட்டன் மஸ்கெலியா ஹட்டன் சாமிமலை ஹட்டன் பொகவந்தலாவ ஹட்டன் நோர்வூட் செல்லும் வழி திறந்து விடப்பட்டது என்று மஸ்கெலியா பொலிஸ் நிலையப பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

