மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கம்பளை நகரில் உள்ள அரச, தனியார் பேருந்து தரிப்பிடத்தில் கடந்த பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட மாகாண சபை அதிகாரிகள், கம்பளை நகர சபை அதிகாரிகள் கவனம் செலுத்த வில்லை எனப் பாடசாலை மாணவர்கள், பயணிகள், சாரதிகள், நடத்துநர்கள், அந்த நிலையத்தில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பேருந்து தரிப்பிடத்தில் பல பகுதிகளில் பாரிய அளவில் உக்கும்; உக்கா பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. பல வாரங்களுக்கு மேல் இந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உடன் அந்த பேருந்து நிலையம், அதன் சுற்றுவட்டாரம் ஆகியவற்றைத் துப்பரவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



