மதிய வேளையில் பெய்து வரும் கனமழையால் பாடசாலை மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நோர்வூட் பிரதேச சபைக்கு உரித்தான பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரிக்குச் செல்லும் பிரதான வீதியில் இடம் பெற்று வருகிறது.
பொகவந்தலாவ நகரில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் பிரதான சாலையில் நகரில் இருந்து வரும் மழை நீர், கழிவு நீர் வடிகான் வழியாகச் செல்வதில்லை.
அந்த மழை நீர் முழுவதும் சாலை வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. .இதன் காரணமாக அந்தப் பிரதான சாலையில் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் அச்சாலையைப் பயன்படுத்தி வரும் பொகவந்தலாவை நகரில் உள்ள வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் உடன் கவனம் செலுத்தி தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டும் என பாதிக்கப்படுகின்ற பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


