தற்பொதைய சீரற்ற காலநிலை காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதற்கட்ட (மஞ்சள் நிற) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, இன்று (12) அதிகாலை 4.00 மணி முதல் நாளை (13) அதிகாலை 4.00 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்குக் குறிப்பிடப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:
களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவரை
கண்டி மாவட்டம்: தொழுவை
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவை
இரத்தினபுரி மாவட்டம்: பெல்மதுளை, அயகமை, இரத்தினபுரி, கொடக்கவலை, கலவானை,நிவித்திகலை.
-இளையகனி
