இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையும் வகையில், இலவச வழிகாட்டல் கருத்தரங்கொன்று நேற்றைய தினம் (27/06/2026) வத்/கந்தகட்டி பாடசாலையில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கிற்கு மலையகத்தில் இருந்து சென்று மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள ‘உதயம் அமைப்பு’ உதவிக்கரம் வழங்கியதோடு, இக்கருத்தரங்கில் பன்விலை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட கோம்பரை த.வி, கந்தகட்டி ஆரம்ப பாடசாலை, உளுகங்கை முஸ்லிம் வித்தியாலயம், ஆகலை தமிழ் வித்தியாலயம், நக்கிள்ஸ் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இம்முறை பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்கள் பங்குபற்றினர்.
ஏற்பாட்டாளர்களால் மாணவர்களுக்குத் தேவையான கையேடுகள்,உபசரிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டதோடு, அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டல் செயற்பாடும் சிறப்பாக இடம்பெற்றது.



