கதிர்காமம் பாத யாத்திரை அடியார்களுடன் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது. 21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பிரதேசத்தில் சந்தேக நபரினால் தாக்கப்பட்டுள்ளமை மனிதாபிமானமற்ற செயலாகும் என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சுமார் 450 கிலோ மீற்றர் தூரம் பயணித்து வந்த நாய் தாக்கப்பட்டமை சமூக ஊடகங்களில் வைரலானதுடன் பல்வேறு தரப்பினரும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கௌசல்யா

