தெல்தெனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெதமஹனுவரை, வைத்தலாவை தோட்டத்தில் பெண்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு செயலமர்வு (நேற்று 27) சிறப்பாக நடைபெற்றது.
தெல்தெனியா பிரதேச செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலைஞரும் சமாதான நீதவானும் பத்திரிகையாளருமான ஆசிரியர் மருதமுத்து நவநீதன் சிறப்பு விரிவுரையாற்றி, பெண்களின் தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்புகள், சமூகப் பங்களிப்பு, குடும்ப முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு ஆகிய விடயங்கள் குறித்து பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்களது சமூக, பொருளாதார,தனிநபர் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு பயனுள்ள அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வை பெண்கள் அபிவிருத்தி பிரிவு அலுவலர் எம். ஏ. நில்மினி ஒருங்கிணைத்தார். இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். தென்னக்கோன், கிராம உத்தியோகத்தர் நிஸன்சலா ராஜசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு, பெண்களின் உரிமைகள், சுயதொழில் வாய்ப்புகள்,
சமூக முன்னேற்றம் தொடர்பான கருத்துரைகளை வழங்கினர்.
மேலும், தெல்தெனியா பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எஸ். இராஜேஸ்வரன் கலந்துகொண்டு, பெண்களின் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு, சமூகப் பொறுப்புகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.
பன்விலை நிருபர்







