அமெரிக்கா இன்று (11) இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்துகிறது!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
ஈரானின் கடற்படை, விமானப்படை, ராடார் அமைப்புகள், விமான எதிர்ப்பு ஏவுகணை கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வளங்களும், தாக்குதல் திறன்களின் பெரும்பகுதியும் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாக திரு.டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பின்னணியில், அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை முன்னெடுக்கவுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதிரியைப்போல, ஈரானின் எண்ணெய்,எரிவாயு சந்தைகளின் முழுமையான கட்டுப்பாட்டையும் அமெரிக்கா பெற்றுக்கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு, அண்மைய நாள்களாக அமெரிக்கா,ஈரான் இடையே தீவிரமடைந்துவரும் இராணுவ பதற்றத்திற்கு மத்தியில் வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
