நாளாந்தம் ஆயிரக்கணக்கான நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பல தரப்பட்ட மக்கள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு வந்து செல்கின்றனர்.
சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி, ஹப்புகஸ்தனை, பொகவந்தலாவை, நோர்வூட், ஹட்டன், டிக்கோயா, புளியாவத்தை போன்ற பகுதிகளில் இருந்து நாளாந்தம் வரும் நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவு கொண்டு வரும் உறவினர்கள்,வைத்திய சாலையில் பணி புரியும் ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மழைக் காலங்களிலும் கோடை காலத்திலும் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து செல்ல வசதி இல்லை.
தற்போது உள்ள தரிப்பிடம் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் கவனம் செலுத்தி, இந்த வைத்திய சாலைக்கு வரும் நோயாளிகளுக்குப் பேருந்து தரிப்பிடம் அமைத்துக்கொடுக்க முன் வர வேண்டும்.
தற்போது மலைநாட்டில் பெய்து வரும் கன மழையால் இவ்வைத்திய சாலைக்கு வந்து செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
