நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அதிக உஷ்ணம் காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 34 அடி குறைந்துள்ளது. அதனால், 1969 ஆம் ஆண்டு நீரில் மூழ்கிய முன்னைய மஸ்கெலியா நகரில் இருந்த ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயம், சுமனா ராம விகாரை,முன்னாள் கங்குவத்தை நகரில் இருந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் போன்றவை தற்போது தரிசனத்திற்காகத் தலைகாட்டுகின்றன.
இவ்வாறு நீர் குறைந்து உள்ளதால் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் உள்ளூர் மக்களும் அங்குப் படை எடுத்து செல்வதைக் காண கூடியதாக உள்ளது.
அவ்வாறு நீர்த் தேக்கப் பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் மிகவும் அவதானமாக செயற் பட வேண்டும் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார, மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீர் தேக்கப் பகுதியில் சேறு கூடுதலாக உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீராட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



