தியத்தலாவைப் பகுதியில் இ.போ.ச.பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி இன்று அதிகாலை பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று தியத்தலாவை ரயில் பாதைக்கு அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்தது.
காயமடைந்தவர்கள் தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவரின் நிலை ஆபத்தானதாக இருந்ததால் அவரை பதுளை மருத்துவமனையக்கு அனுப்பிவைத்ததாக தியத்தலாவை மருத்துவமனையின் பேச்சாளர் ஒரவர் தெரிவித்தார்.
கௌசல்யா, எஸ். ஆர. இரவீந்திரன்

