கந்தகட்டியில் மாணவர் பாராளுமன்றம் உருவாக்கத்திற்கான வாக்கெடுப்பு இன்று (07) நடைபெற்றது.
வத்தேகமை கல்வி வலயத்தின் பன்விலை கந்தகட்டி த.ம.வி பாடசாலையில் மற்றுமொரு சிறப்பு நிகழ்ச்சியாக இன்றையதினம் (07/07/2026) அதிபர் சுமன் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றறது.
2026 ஆம் ஆண்டுக்கான மாணவ பாராளுமன்றத்தை தாபிப்பதற்கான தேர்தல் இன்றைய தினம் அதிபரது வழிகாட்டலுடனும் பொறுப்பாசிரியர் ஜெயச்சந்திரன் தலைமையிலும் முறையாக நடைபெற்றது.
அப்போது அயற்பாடசாலை அதிபர்களதும் பாடசாலையின் ஆசிரியர்களதும் பங்குபற்றலானது சிறப்பாக அமைந்திருந்ததோடு மாணவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தலில் ஈடுபட்டமையானது சிறப்பம்சமாகும்.



நாளைய சமூகத்தலைவர்களான மாணவர் மத்தியில் தமைத்துவப் பண்புகளை வளர்த்தலையும் அரசியலில் நேர்ச்சிந்தனையுடன் பங்குபற்றும் சமூகத்தை தோற்றுவித்தலையும் நோக்காக கொண்டு கந்தகட்டியில் மாணவர் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டது.
இந்த மாணவர் பாராளுமன்ற தேர்தலானது பாடசாலை காலம் முதலே அரசியல் மற்றும் வாக்களிக்கும் முறைமை என்பவற்றையும் மாணவர் மத்தியில் இன்று கொண்டு சேர்த்தமையை கண்கூடாகக் காணமுடிந்தது.
பாடசாலையின் மூலம் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள் ஏராளம் அவற்றுள் அறிவார்ந்த அரசியல் தலைமைகளுக்கு பயிற்சியளிக்கும் செயற்பாட்டை கந்தகட்டி பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக நடத்தியிருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாக நோக்கப்படுகின்றது.
