இரத்தினபுரி தமிழ் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.
இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் இரத்தினபுரி சைவ பரிபாலன சபைத் தலைவர் பொன்.சிவாஜி இலவசமாக எழுதுபொருள்களை வழங்கினார்.


பாடசாலையில் தினசரி மேலதிக வகுப்புகள் இலவசமாக நடைபெற்று வருவதை ஊக்குவிக்குமுகமாக, திரு. சிவாஜி தனது சொந்தச் செலவில் இலவச எழுதுபொருள்களை புதன் கிழமை (15) வழங்கினார்.
இந்த எழுது பொருள்களை மாணவர்களுக்கு வகுப்பாசிரியர் திருமதி எஸ். ரஞ்சனி பகிர்ந்தளித்தார்.
இரத்தினபுரி மலைக்குருவி நிருபர்
