மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் படைப்புத் திறன் கண்காட்சியும் சுற்றாடல் கண்காட்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கண்டி மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் வித்தியாலய ஆரம்பப் பிரிவுக்கான சுற்றாடல் கண்காட்சியும் இடைநிலைப் பிரிவுக்கான படைப்புத்திறன் கண்காட்சியும் பாடசாலை வளாகத்தில் அதிபர் பி.சிவானந்தன் தலைமையில் கடந்த புதன், வியாழன் ஆகிய இரு நாள்களும் நடைபெற்றன.
இதையம் படியுங்கள்: கந்தகட்டியில் மாணவர் பாராளுமன்றம் உருவாக்கம்
நிகழ்ச்சியில் வத்தேகமை கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஃபாரூக் உடையார், பன்விலை கல்விக் கோட்டத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரஹீம், பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரத்நாயக்க, அயல் பாடசாலைகளின் அதிபர்கள், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள், ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



குப்பையில் இருந்து பொக்கிஷம்,
இரு உலகங்கள்,
எதிர்கால சமூக நகரம்,
ஒரு செடியை தத்தெடுப்போம்,
குட்டி மேதைகளின் பரிசோதனை உலகம்,
சிறிய கனவுகள் பெரிய வேகம்,
நினைவுப்பட மூலை,
சித்திர மாளிகை,
படைப்புத்திறன் சோலை,
பூமியின் தாகம்
தொழில்நுட்பத்தின் மையம்
இல்லற அறிவியல் அரங்கம்
இசை இன்பச் சோலை
நல் வாழ்வு கஃபே போன்ற தலைப்புகளிலான கண்காட்சிகள் மாணவர்களின் படைப்பாற்றல்களை பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டிருந்தன.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
