லக்கம் சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச சபையினூடாக சித்திர,ஆக்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மஸ்கெலியா பிரதேச சபையின் பொது நூலகம் மூலம் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற அடிப்படையில் இனம், மொழி, மதம் அப்பால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹட்டன் கல்வி வலய கோட்டம் மூன்று லக்கம் சிங்கள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையே ஓவியம் வரைதல் போட்டிகள் மஸ்கெலியா பொது நூலகம் ஊடாக நடத்தப் பட்டு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் அடங்கலாக மஸ்கெலியா பொது நூலக பொறுப்பாளர் திருமதி கிருஷ்ணவேணி, லக்கம் சிங்கள பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்






