நாட்டில் நிலவிய டிட்வா அசாதாரண காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த பின்னணியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
“கறுப்பு யூலை: கற்காத பாடங்கள்; நூலறிமுகமும் கலந்துரையாடலும்” என்ற நிகழ்வு பிற்போடப் பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி – ஞாயிற்றுக்கிழமை அன்று #செம்புலம் மக்கள் கூடத்தினால் (REDFIELDS PEOPLE’S FORUM) மீள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
திகதி: 22/02/2026
நேரம் : காலை 10.00 மணி
இடம் : ஹட்டன் – டிக்கோயா நகரசபை, பிரதான மண்டபம்
நாட்டின் #தேசிய இனப்பிரச்சினையின் குறுக்கு வெட்டு முகத்தை மிகத்தெளிவாக பல்வேறு ஆதாரங்களையும் தரவுகளையும் இணைத்து பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்: முனைவர் தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ.
எனவே மிக அண்மையில் வடலி பதிப்பகத்தினூடாக மிகச் சிறப்பாக பதிப்பிக்கப்பட்டு அச்சில் வெளிவந்திருக்கும் இந்நூலினை பல்வேறு தளங்களில் கலந்துரையாடுவதனூடாக, மறைக்கப்பட்ட வரலாறுகளை தெளிவாக விளங்க முற்படுவதுமட்டுமல்லாமல் வரலாறுகளில் இருந்து கற்க தவறிய பாடங்கள் எவை எனவும் கண்டறிவோம்.
நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியளாளர்கள், சமூக ஆர்வளர்கள், கல்வியியலாளர்கள் அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

