நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று 18 ஆம் திகதி காலை முதல் மழையுடனான காலநிலை நிலவுகிறது.
இதன் காரணமாக நுவரெலியா பதுளை வீதியில் கிறேகரி ஏரிப் பகுதியில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுகிறது.
வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட காவல் துறை தலைமை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள்,சிறிய ரக வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


