நுவரெலியா பேருந்து நிலையத்தில் பல பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
தற்போது மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் நுவரெலியா பேருந்து நிலைய பகுதியில் கருப்பு நிறத்தில் அங்குக் காணப்படும் குழிகளில் மழைநீர் நீர் தேங்கி நிற்பதால், பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், பயணிகள், சாரதிகள், நடத்துநர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.
குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படும் நுவரெலியா நகருக்கு வருகை தரும் உள் நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள், பேருந்து நிலைய பகுதிக்குச் செல்லும் போது பேருந்துகள் விசிறியடிக்கும் கழிவு நீரால் குளிப்பாட்டப்படுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்




