யாழ்ப்பாணத்தில் இன்று ஜூன் 24ஆம் திகதி பொலிஸார் கைதுசெய்த தெல்தெனியா பெண் மருத்துவர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தெல்தெனியா வைத்தியசாலைக்கு அருகில், கார் ஒன்றினுள் 33 வயதுடைய வெலிகமை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூன் 17 ஆம் திகதி காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தெல்தெனினியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்தச் சம்பவம், நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றதாகக் கருதப்பட்டதால், மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மருத்துவ பெண்ணின் மரணம் தொடர்பில் அந்தப் பெண்ணின் காதலன் என அறியப்படும் சந்தேக நபரை இன்று 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
அவருடன் அவரின் மனைவியையும் பொலிஸார் கைது செய்தனர்.கைதான சந்தேக நபர் 43 வயதானவர், சந்தேக நபரான அந்தப் பெண் 35 வயதானவர் என்றும் அவர் பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.
மேலதிக விசாரணைகளின் போது, இச்சந்தேக நபர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறிப்பாக கம்பஹா, புதுக்கடை, திஸ்ஸமாராமை, கடுவெலை, ஹொரணை ஆகிய பகுதிகளில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் ,பல நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவற்றுள் சில:
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ஒரு கோடியே 18 இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபாயையும் கார் ஒன்றையும் சட்டவிரோதமாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பான வழக்கு, கம்பஹா நீதவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது.
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, 17 இலட்சத்து 21ஆயிரம் ரூபாயை மோசடி செய்தமை தொடர்பாக புதுக்கடை 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையில் உள்ளது.
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, 13 இலட்சத்து 76ஆயிரம் ரூபாயை மோசடி செய்தமை தொடர்பாக புதுக்கடை 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் மற்றொரு வழக்கும் விசாரணையில் உள்ளது.
வெளிநாட்டிலிருந்து வாகனம் இறக்குமதி செய்வதாகக் கூறி, 22 இலட்சம் ரூபாயை மோசடி செய்தமை தொடர்பாக திஸ்ஸமாராமை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையில் உள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்(CID) இந்தச் சந்தேக நபருக்கு எதிராக அத்தனகல்லை, ஹோமாகமை, கடுவெலை நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த 04 வழக்குகள் விசாரிக்கப்பட்டுவருகின்றன.
வெளிநாடு செல்வதற்கு உதவுவதாகக் கூறி, 42 இலட்சம் ரூபாயை மோசடி செய்தமை தொடர்பாக அத்தனகல்லை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையில் உள்ளது.
வெலிகமை மருத்துவப் பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிஸார் கைது செய்துள்ள சந்தேக நபரிடம் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கௌசல்யா